முக்கிய செய்தி
மின்சார கட்டணம் அதிகரிக்குமா..!
மின்சாரசபையினால் கணிக்கப்பட்டுள்ள 32 பில்லியன் ரூபா நட்டத்தை ஈடுகட்டுவதற்கு முன்னர் 22% கட்டண அதிகரிப்பு தேவைப்பட்டது, ஆனால் தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு 18% மின் கட்டண அதிகரிப்பே போதுமானது என மின்சார சபை தெரிவித்துள்ளது.இந்த வருடம் ஜூலை மாதம் மின்சாரக் கட்டணங்கள் திருத்தியமைக்கப்பட்டு, அடுத்த திருத்தம் எதிர்வரும் ஜனவரி மாதம் மேற்கொள்ளப்படவுள்ள நிலையில், இம்மாதத்திலிருந்து மேலும் கட்டண அதிகரிப்பு தேவையென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்திருந்தது.
அந்த வகையில், மின்கட்டணத்தை 22 சதவீதம் அல்லது ஒரு யூனிட் மின்சாரத்திற்கு 8 ரூபா உயர்த்த அனுமதி கோரியுள்ளனர்.