முக்கிய செய்தி
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு !
மலையகத்திற்கான ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பண்டாரவளை மற்றும் தியத்தலாவை ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் ரயில் தடம்புரண்டுள்ள நிலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ரயில் வழித்தடமேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.பதுளை ரயில் நிலையத்தில் இருந்து இன்று முற்பகல் கொழும்பு நோக்கி பயணித்த ரயில்லே இவ்வாறு தடம்புரண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.