Connect with us

முக்கிய செய்தி

எதிர்க்கட்சித் தலைவர் – பலஸ்தீன தூதுவர் சந்திப்பு

Published

on

 இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையில் நிலவும் போர்ச் சூழலை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து, இரு நாட்டு மக்களின் உயிர் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

வன்முறையோ அல்லது போரோ ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒரே தீர்வு அல்ல என்பதை வலியுறுத்திய பிரேமதாச, தற்காலிக சமாதானத்தை விட நிரந்தர சமாதானத்தை தான் அதிகம் நம்புவதாக தெரிவித்தார்.அவ்வாறான நிரந்தர சமாதானத்திற்காக இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.எதிர்க்கட்சித் தலைவர் பலஸ்தீன தூதுவர் சுஹைர் ஹம்தல்லாஹ் சைதை நேற்று சந்தித்து கலந்துரையாடிய பின்னர் இதனைத் தெரிவித்துள்ளார்.இரு நாடுகளிலும் சிறுவர்கள், பெண்கள் உட்பட அப்பாவிப் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர், காயமடைந்துள்ளனர் அல்லது சித்திரவதைக்கு உள்ளாகியுள்ளனர் எனவும், யுத்த சூழ்நிலையில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், இந்த மோதல்களை நிறுத்துமாறு இரு தரப்பையும் கேட்டுக் கொண்டுள்ளார்.மோதல் காரணமாக இரு நாடுகளிலும் உயிரிழந்தவர்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரங்கல் தெரிவித்துள்ளார்.