உலகம்
காசாவில் போர் நிறுத்தம்: மூன்று நாடுகள் இணக்கம்
ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவுடன் இஸ்ரேல் போரிட்டு வருகிறது. இருப்பினும் காசாவின் தெற்குப் பகுதியில் மட்டும் போரை நிறுத்த இஸ்ரேல், அமெரிக்கா, எகிப்து ஆகிய நாடுகள் ஒப்புக் கொண்டுள்ளன.தெற்கு காசாவில் இன்று (16.10.2023) காலை 6 மணியிலிருந்து போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்துள்ளது .இதையடுத்து ராஃபா எல்லைப் பகுதி திறக்கப்படும் என எகிப்து பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ராஃபா எல்லை திறப்புஇதனால் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.போர் நிறுத்தம் பல மணி நேரம் நீடிக்கும் எனவும், அது குறித்து தெளிவான நேரம் அறிவிக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.மூன்று நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் ராஃபா எல்லை இன்று பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.ராஃபா, எகிப்தின் சினாய் தீபகற்பத்துக்கும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவிற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியாகும்.இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத இந்த ஒரே பாதை வழியாகத்தான் மக்கள் வெளியேற வேண்டும்.