Connect with us

முக்கிய செய்தி

மருந்து மோசடி: பணம் செலுத்துவதை நிறுத்துமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

Published

on

  Isolez Bio-Tech Pharma என்ற நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து மருந்து விநியோக ஒடர்களையும் உடனடியாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த நிறுவனத்துடன் தொடர்புடைய மருந்து மோசடிகள் தொடர்பில் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் தொடர்புடைய அனைத்து நிறுவனங்களின் தலைவர்களுக்கு எழுத்து மூலம் அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உத்தரவுகளையும் பெற வேண்டிய மருந்துகளையும் இடைநிறுத்தவும் இரத்து செய்யவும் சுகாதார அமைச்சர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார், அதே நேரத்தில் இந்த நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன.நிறுவனத்துடன் தொடர்புடைய மருந்து மோசடிகள் தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முடியும் வரை ஒடர்கள் மற்றும் பணம் செலுத்துதல் இடைநிறுத்தம் நடைமுறையில் இருக்கும்.Isolez Bio-Tech Pharma மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துமாறு கோரி CIDயிடம் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.இது தொடர்பான சட்ட ஆலோசனைகளை பெற்று, இது தொடர்பான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு சுகாதார அமைச்சர் சட்டமா அதிபருக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.இதேவேளை, போலி ஆவணங்கள் மற்றும் கையொப்பங்களைப் பயன்படுத்தி இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் விசாரணை நடத்துமாறும், மருந்துகளை சந்தைக்கு வெளியிடுவதை நிறுத்துமாறும் கோரி இதுவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஐந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான நிஹால் தல்துவ செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.இந்த விடயம் தொடர்பில் சிஐடி அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.