Connect with us

Sports

உலகக் கிண்ண கிரிக்கெட் தரவரிசையில் திடீர் மாற்றம்….! முதலிடத்தை பிடித்துள்ள அணி

Published

on

இந்தியாவில் நடைபெற்று வரும் உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்ரிக்கா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.

தென் ஆப்ரிக்கா அணி இதுவரை பங்கேற்ற 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த நிலையில், மற்றைய அணிகள் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்ற போதிலும், நிகர ஓட்ட விகிதம் (Net Run Rate) வித்தியாசத்தால் தரவரிசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணி பங்குபற்றிய 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் தற்போது இரண்டாம் இடத்தில் உள்ளது. 

உலகக் கிண்ண கிரிக்கெட் தரவரிசையில் திடீர் மாற்றம்....! முதலிடத்தை பிடித்துள்ள அணி | Cricket World Cup 2023

மேலும், இந்திய அணி பங்கேற்ற 02 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் உலகக்கிண்ண போட்டியில் இலங்கை, அவுஸ்திரேலியா, நெதர்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகள் இது வரை எந்த வெற்றியையும் பதிவு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *