Connect with us

முக்கிய செய்தி

தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு கோரிக்கை !

Published

on

மரணித்த தொழிலதிபர் தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய அனுமதிக்குமாறு அவரது குடும்பத்தினர் நேற்று திங்கட்கிழமை (09) நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து கொழும்பு மேலதிக நீதிவான் ராஜீந்திர ஜயசூரிய இந்தக் கோரிக்கையை பரிசீலித்தார்.

இந்நிலையில், தினேஷ் ஷாப்டரின் உடலை தகனம் செய்ய முடியுமா என்பதை நீதிமன்றத்துக்கு தெரிவிக்குமாறு, தினேஷ் ஷாப்டரின் மரணத்துக்கான காரணத்தை கண்டறியும் பேராசிரியர் அசேல மெண்டிஸ் தலைமையிலான ஐவர் அடங்கிய நிபுணர் குழுவுக்கு நீதிவான் உத்தரவிட்டார்இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு நேற்று (09) விசாரணைக்கு வந்தபோது உயிரிழந்த தினேஷ் ஷாப்டரின் குடும்பத்தின் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, சில தகவல்களை முன்வைத்து, இறந்தவரின் உடலை தகனம் செய்வதே தனது தரப்பினரின் விருப்பமாக உள்ளதாகவும் அதற்காக நீதிமன்றத்தின் அனுமதியையும் கோரினார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *