உள்நாட்டு செய்தி
இறக்குமதி தடை நீக்கம்: விசேட வர்த்தமானி அறிவித்தல்
இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் அனைத்து பொருட்களுக்கான இறக்குமதி தடை நீக்கம் வாகனம் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் விதிக்கப்பட்டிருந்த இறக்குமதி கட்டுப்பாடுகள் இன்று (09.10.2023) முதல் நீக்கப்பட்டுள்ளன.இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
காரணத்தை வெளியிட்டுள்ள நிதி அமைச்சுகோவிட் தொற்று காரணமாக 2020 மார்ச் மாதம் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை இலங்கை திரும்பப் பெறுவது இதுவே முதல் முறையாகும்.இருப்பினும், பயணிகள் வாகனங்கள் மீதான இறக்குமதித் தடைகள் விரைவில் நீக்கப்பட வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.