உள்நாட்டு செய்தி
கொழும்பு உட்பட பல பகுதிகளில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை
நாட்டின் பல பகுதிகளில் வாகனம் திருடும் சம்பவங்கள் பாரிய அளவு அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
பல கோடி ரூபா பெறுமதியான வாகனங்களை திருடிய சந்தேக நபர் ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் போலி ஆவணங்களை தயாரித்து திருடப்பட்ட வாகனங்களை பல்வேறு நபர்களுக்கு விற்பனை செய்துள்ளமை தெரிய வந்துள்ளது.
காலி, தங்கல்ல, ஹோமாகம உள்ளிட்ட பல பகுதிகளில் வாகனங்களை திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.