உள்நாட்டு செய்தி
மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு
மட்டக்களப்பு பிள்ளையாரடி பகுதியில் 81 ரக மோட்டார் குண்டு ஒன்றினை கொக்குவில் பொலிஸார் மீட்டுள்ளனர்.மட்டக்களப்பு பிள்ளையார் அடி ஆற்றங்கரை பகுதியில் மோட்டார் ரக குண்டு ஒன்று இருப்பதை அவதானித்த கடற்றொழிலாளர் ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த குண்டு மீட்கப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட குண்டு தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.