அரசியல்
பெரும் பொருளாதார நெருக்கடியில் மக்கள்: அரசாங்கத்திடம் பதிலை எதிர்பார்க்கும் சஜித்
இலங்கையில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.நாடாளுமன்றில் இன்றைய தினம் (05.10.2023) உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.
விலைகள் அதிகரிப்புஅவர் மேலும் தெரிவிக்கையில், லிட்ரோ எரிவாயுவின் விலை 343 ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. நீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் மின்சார கட்டணத்தையும் உயர்த்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
பாடசாலைகளுக்கான டிசம்பர் மாத விடுமுறையில் மாற்றம்இவ்வாறான ஒரு பின்னணியில் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசாங்கம் புள்ளி விபரங்களின் அடிப்படையில் நாட்டில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது என கூறி வருகின்றது.எனினும் நாட்டு மக்களுக்கு அவ்வாறான ஒரு நிலையை உணர முடியவில்லை, மக்களின் வயிற்றுக்கு அதனை உணர முடியவில்லை.
எனவே இந்த விடயங்கள் தொடர்பில் நான் அரசாங்கத்திடம் ஒரு தெளிவான பதிலையே எதிர்பார்க்கின்றேன்.பெரும் பொருளாதார நெருக்கடி
நாட்டு மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையானது பொருளாதாரத்தை விரிவுப்படுத்துவதற்கு அன்றி பொருளாதாரத்தை சுருங்கச் செய்யும் ஓர் கொள்கையாகவே காணப்படுகின்றது.மக்களின் வருமான வழிகள் குறைவடையும்போது அவர்கள் எவ்வாறு வாழ்க்கையை முன்னெடுப்பார்கள்?கடந்த கடந்த 48 மணித்தியாலங்களில் 11 காணாமல் போதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் தற்பொழுது ஸொம்பீ எனப்படும் ஓர் வகை ஆபத்தான போதைப்பொருள் பயன்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்த விடயங்கள் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்