உள்நாட்டு செய்தி
ரயில் பருவகால சீட்டு முறை இரத்து
எதிர்காலத்தில் ரயில் பருவகால சீட்டை (சீசன் டிக்கெட்) இரத்துச் செய்வதுடன் அனைத்து கட்டணங்களையும் உயர்த்த போக்குவரத்து அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றியதன் பின்னர், இது நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ரயில்வே திணைக்கள பிரதானிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று போக்குவரத்து அமைச்சில் அண்மையில் இடம்பெற்றபோதே, அமைச்சு இதனை வெளிப்படுத்தியுள்ளது.இதன்படி, ரயில் சீசன் டிக்கெட்டுகளை இரத்துச் செய்வதன் மூலம் அதிகார சபை பெருமளவு இலாபத்தை பெற முடியும் என போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.