உள்நாட்டு செய்தி
குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் உயிரிழப்பு
மாத்தறை- கம்புருபிட்டிய – உல்லல்ல பிரதேசத்தில் குளத்தில் மூழ்கி பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாத்தறை புனித தோமஸ் கல்லூரியில் தரம் 8 இல் கல்வி கற்கும் தருஷ தினுவர என்ற 13 வயது மாணவனே இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இவர், பாடசாலையில் ஹொக்கி பயிற்சியில் ஈடுபட்டதன் பின்னர் சக மாணவர்களுடன் சபுகொட பகுதியில் உள்ள குளத்தில் நீராடச் சென்ற நிலையிலேயே நீரில் மூழ்கியுள்ளார்.
கோட்டாபய மற்றும் மகிந்தவுடனான இரகசிய தொடர்புகளை அம்பலப்படுத்திய பிள்ளையான்மூன்று மணித்தியாலங்களின் பின் சடலம் கண்டுபிடிப்புநீரில் மூழ்கிய இவரைப் பிரதேசவாசிகள் தேடியபோது மூன்று மணித்தியாலங்களின் பின்னரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகஎன்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மாணவனின் சடலம் கம்புருபிட்டிய வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது என்று சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.