Connect with us

உலகம்

பிரித்தானியாவில் சிகரெட்டுக்கு தடை

Published

on

பிரித்தானியாவின் அடுத்த தலைமுறையினர் சிகரெட் பிடிப்பதை மொத்தமாகத் தடுக்கும் நடவடிக்கைகளில் அந்நாட்டு பிரதமர் ரிஷி சுனக் ஈடுபட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்து வெளியிட்டுள்ளன.

மேலும், சிகரெட் பிடிப்பதை மொத்தமாகத் தடுக்கும் வகையில் ரிஷி சுனக் விரைவில்  அறிவிப்பை ஒன்றை வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள.

முன்னதாக நியூசிலாந்து இதேபோன்ற ஒரு நடவடிக்கையை எடுத்திருந்தது. அடுத்த தலைமுறை மக்கள் சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாவதைத் தடுக்கும் வகையில் கடந்தாண்டு நியூசிலாந்து ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது.

இந்நிலையில் 2009 ஜனவரி 1ஆம் திகதிக்குப் பிறகு பிறந்த ஒவ்வொருவரும் நியூசிலாந்தில் புகையிலை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்ற ஒரு தடை விதிப்பது குறித்தே ரிஷி சுனக் இப்போது தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவில் சிகரெட்டுக்கு தடை: தீவிர ஆலோசனையில் ரிஷி சுனக் | Sunak Moves To Ban Cigarettes For Next Generation

இது குறித்த கேள்விக்குப் அந்நாட்டு அரசின் செய்தித் தொடர்பாளர் கருத்து வெளியிடுகையில்,

“2030ஆம் ஆண்டில் புகை பிடிக்கும் நபர்களே இல்லாத நாடாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு.

இதற்காகப் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புகை பிடிக்கும் பழக்கத்தைக் கைவிடும் மக்களை ஊக்குவிக்க விரும்புகிறோம்.

பிரித்தானியாவில் சிகரெட்டுக்கு தடை: தீவிர ஆலோசனையில் ரிஷி சுனக் | Sunak Moves To Ban Cigarettes For Next Generation

இவற்றை மனதில் வைத்தே தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்” என தெரிவித்துள்ளார்.     

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *