Sports
உலகக்கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு புதிய தலைவர்…!

இலங்கை ஒருநாள் மற்றும் T20 அணிகளின் தலைவராக இருந்த சகலதுறை வீரர் தசுன் ஷானக்கவை,எதிர்வரும் ஒருநாள் உலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் இருந்து நீக்க தெரிவுக்குழு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தசுன் ஷானக்க இன்று (20) காலை இலங்கை கிரிக்கெட் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டதாகவும்,அங்கு அவர் தலைமைத்துவத்தை விட்டு விலக விருப்பம் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான புதிய தலைவர் இன்று பிற்பகல் நியமிக்கப்பட உள்ளதாகவும் தெரியவருகிறது.