முக்கிய செய்தி
கடும் மழை நாளொன்றுக்கு சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவு!
இந்த வருடம் இதுவரை 63,500 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்தார்.
கடும் மழை காரணமாக நாளொன்றுக்கு சுமார் 100 டெங்கு நோயாளர்கள் பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசேட நுளம்பு ஒழிப்பு வேலைத்திட்டம் இம்மாதம் இறுதி வாரத்திற்குள் நடைமுறைப்படுத்தப்படும் என வைத்தியர் நளின் ஆரியரத்ன மேலும் தெரிவித்தார்.