உள்நாட்டு செய்தி
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டண நிவாரணம் ?
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மின் கட்டண நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே (Marc Andre) விற்கும் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிற்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதுகுறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை இனம் கண்டு அவர்களுக்கு மின் கட்டணத்தில் ஒரு தொகை நிவாரணத்தை பெற்றுக்கொடுப்பதற்கு இந்த கலந்துரையாடலின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இந்நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்கான பசுமை நிதி வசதிகள் தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன.மேலும் மின்சார சபையினை மறுசீரமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.