Connect with us

முக்கிய செய்தி

பிரபல பாடசாலை ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்ட ஆயுத களஞ்சியம்

Published

on

பிரபல பாடசாலையில் ஒன்றில் ஆயுத களஞ்சியசாலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மாத்தறை, மத்தவத்த பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை ஒன்றில் கட்டப்பட்டுள்ள அறையின் மேற்கூரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் அடங்கிய ஆயுதக் களஞ்சியமே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலையில் கட்டப்பட்ட அறை பயன்படுத்தப்படாமல் இவை இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

T56 தோட்டாக்கள் 20 , 24 மில்லி மீற்றர் 32 தோட்டாக்கள், 9 மில்லி மீற்றர் 107 தோட்டாக்கள் மற்றும் துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன.

மேலும், தொடர்ந்து தேடுதலின் போது, ​​டிஎன்டி என சந்தேகிக்கப்படும் 194 கிராம் வெடிபொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *