உள்நாட்டு செய்தி
வாகனங்களை கொள்ளையிட்டு வந்த தாய் மற்றும் மகன் உள்ளிட்ட மூவர் கைது.!
ஜாஎல பகுதியில் வாகனங்களை கொள்ளையிட்டு வந்த தாய் மற்றும் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களால் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஏழு உந்துருளிகள் மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் சந்தேக நபர் ஒருவரிடமிருந்து கைக்குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.