உள்நாட்டு செய்தி
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக பலரிடமிருந்து,பணத்தை மோசடி செய்தவரே பயணப் பொதியொன்றினுல் சடலமாக மீட்கப்பட்டார்.!
சீதுவையில் நீலநிற பயணப் பொதியொன்றில் இடப்பட்டு வீசப்பட்டிருந்த நிலையில் ஆண் ஒருவரின் சிதைந்த சடலம் அண்மையில் மீட்கப்பட்டது.இது தொடர்பான விசாரணைகளை சீதுவ பொலிஸார் முன்னெடுத்திருந்தனர். சீதுவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிதிகொட பிரதேசத்தில் தடுகம் ஓயாவின் கரையில் இருந்தே சடலம் மீட்கப்பட்டது.
வேலைவாய்ப்பு பெற்றுக் கொடுக்கும் முகவர் என்றும் இவர், மாரவில பிரதேசத்தில் வசிப்பவர் என்றும் தெரிய வந்துள்ளது.குறித்த நபர் வெளி நாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி பலரிடமிருந்து பணத்தை மோசடி செய்தவர் என விசாரணைகளின்போது தெரிய வந்துள்ளதாக சீதுவ பொலிஸார் தெரிவித்தனர். இவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
தன்னுடைய வீட்டில் இருந்து சில நாட்களுக்கு முன்னர் வெளியேறியவரை இவ்வாறு காணாமல் போய் பின்னர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.