உள்நாட்டு செய்தி
நியூயோர்க் நகரை சென்றடைந்தார் ஜனாதிபதி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கியூபாவிலிருந்து இன்று அதிகாலை அமெரிக்காவின் நியூயோர்க் நகரை சென்றடைந்ததாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இடம்பெறவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் 78 ஆவது பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமெரிக்கா சென்றுள்ளார்.
ஜி 77 மற்றும் சீன அரச தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி கடந்த புதன்கிழமை கியூபா ஹவானா நகரை சென்றடைந்தார். இந்தநிலையில், கியூபா விஜயத்தை நிறைவு செய்த பின்னர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நியூயோக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.