Connect with us

Sports

எட்டாவது முறையாக சம்பியன் பட்டத்தை வென்றது இந்தியா..!

Published

on

16ஆவது ஆசியக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சம்பியன் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டியில், இலங்கை கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்தியக் கிரிக்கெட் அணி எட்டாவது முறையாக சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இந்தப் போட்டியில் இந்தியக் கிரிக்கெட் அணி, 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.கொழும்பு – ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல், ஓட்டங்களுக்கு சுருண்டது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக குசல் மெண்டிஸ் 17 ஓட்டங்களையும் துஷான் ஹேமந்த ஆட்டமிழக்காது 13 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.இந்தியக் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சில், மொஹமட் சிராஜ் 6 விக்கெட்டுகளையும் ஹர்திக் பாண்ட்யா 3 விக்கெட்டுகளையும் பும்ரா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 51 ஓட்டங்கள் என்ற எளிய வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இந்தியக் கிரிக்கெட் அணி, 6.1 ஓவர்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை கடந்தது.இதனால் இந்தியக் கிரிக்கெட் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.இதன்போது ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான சுப்மான் கில் ஆட்டமிழக்காது 27 ஓட்டங்களையும் இசான் கிசான் ஆட்டமிழக்காது 23 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக ஆறு விக்கெட்டுகளை சாய்த்த மொஹமட் சிராஜ் தெரிவுசெய்யப்பட்டார்.இலங்கை கிரிக்கெட் அணியின் வரலாற்றில் பதிவான மிக மிக மோசமான தோல்வியான இப்போட்டியின் தோல்வி பார்க்கப்படுகின்றது.