முக்கிய செய்தி
2024 வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு சலுகை வழங்குமாறு வலியுறுத்த இரு கட்சிகள் தீர்மானம்
எதிர்வரும் 2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு சலுகைகளை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் விசேட கோரிக்கையொன்றை முன்வைக்க அரசாங்கத்தின் இரண்டு அங்கத்தவர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதன்படி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் மஹாஜன எக்சத் பெரமுன ஆகிய இரண்டும் இணைந்து நிதி அமைச்சரான ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளன.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் கூடிய போது, ம.இ.க உறுப்பினர்கள் அதன் தலைவர் பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் கூட்டமொன்றை நடத்திய போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வால் பொதுமக்களுக்கு சுமை ஏற்பட்டுள்ளதால், இரு பிரிவினரும் ஒருமனதாக வரவு -செலவுத் திட்டம் மூலம் நிவாரணம் வழங்க வலியுறுத்தியுள்ளனர்.ஜனாதிபதி விக்கிரமசிங்க வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளை அடுத்த மாதம் சமர்ப்பிக்கவுள்ளார், அதேவேளை வரவு செலவுத் திட்ட உரை நவம்பரில் இடம்பெறவுள்ளது.முன்மொழிவுகள் ஏற்கப்பட்டு வரவு செலவுத் திட்டம் உருவாக்கம் தற்போது நடைபெற்று வருகிறது.