Connect with us

முக்கிய செய்தி

இலங்கையை அழிவுக்கு கொண்டு செல்லும் செயற்பாடு: உலக தமிழர் பேரவை எச்சரிக்கை

Published

on

குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறாத நிலைமை இலங்கையில் தொடர்வது மேலும் பேரழிவுகளையும் இருளையும் ஏற்படுத்தும் என உலக தமிழர் பேரவை தெரிவித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக உலக தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட  அறிக்கையொன்றில் இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,அண்மையில் பிரித்தானியாவின் சனல் 4 ஊடகம் வெளியிட்ட காணொளியில் ராஜபக்ச குடும்பத்திற்கு நெருக்கமான அரசாங்க உத்தியோகத்தர்கள் 2019 உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல்களின் பின்னணியில் செயற்பட்டு உளளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.இந்த தாக்குதல் சம்பத்தில் 45 வெளிநாட்டு பிரஜைகள் உள்ளிட்ட 270 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இனவாதத்தை தூண்டி நாட்டில் பாதுகாப்பற்ற நிலையை உருவாக்கி அதன் மூலம் ஆட்சியை மீள கைப்பற்றும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த அதிர்ச்சியான பின்னணி இலங்கையில் வாழும் எவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்காது என்பது வேதனை மிகுந்த யதார்த்தமாகும்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிடப்படும் தகவல்கள் உண்மை இல்லை என்பது அநேகரினால் புரிந்து கொண்ட ஒன்றாகும். உண்மையில் இனங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை ஏற்படுத்தி அதன் ஊடாக உயிர்களை காவு கொடுத்து அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதும் கவிழ்ப்பதும் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒரு நடைமுறையாகவே கருதப்படுகின்றது.இந்த மோசமான கலாச்சாரம் காரணமாக இலங்கையின் நீதிமன்றக் கட்டமைப்பினால், எப்பொழுதும் உண்மையையும் நியாயத்தையும் வழங்க முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கை மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதல் சம்பவம் தொடர்பில் சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர்களும் கத்தோலிக்க தலைவர்களும் விடுக்கும் கோரிக்கைக்கு உலக தமிழர் பேரவை வலுவான ஆதரவை வழங்குகின்றது.இந்த தருணத்தில் சனல் 4 ஊடகத்தினால் இதற்கு முன்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியிடப்பட்ட கொலைக்களம் என்ற காணொளியை நினைவு கூறுகின்றோம். இலங்கை தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் நிர்வாணமாக கண்கள் கட்டப்பட்ட நிலையில் இலங்கை படையினரால் சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படும் காட்சிகள் இந்த காணொளியில் வெளியிடப்பட்டிருந்தது.உயர் நீதிமன்றில் இன்று முன்னிலையாகவுள்ள மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர்மனித உரிமை மீறல்இந்த விவகாரம் உலக சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதுடன் ஐக்கிய நாடுகள் விசாரணைகள் மற்றும் தடைகள் விதிக்கப்பட வேண்டும் என கோரப்பட்டிருந்தது.எனினும் இலங்கை அரசாங்கம் இந்த காணொளி போலியானது எனவும் இது நாட்டின் பெரும்பான்மை சமூகத்திற்கு எதிரான சதித்திட்டம் எனவும் அரசாங்கங்கள் கூறி வந்தன.

நாட்டில் இடம் பெற்ற குற்ற செயல்கள் பொருளாதார குற்றச்செயல்கள் என்பனவற்றிற்காக தண்டனை விதிக்கப்படாத நிலைமை அல்லது பொறுப்பு கூற படாத நிலைமை தொடர்ந்தும் நீடித்து வருகின்றது.உறுதியான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றாலும் குற்றவாளிகளை தண்டிக்க வலியமையற்ற நிலைமை நீடித்து வருகின்றது.இலங்கையை கடந்த 14 ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கண்காணித்து வருகின்றது. மீண்டும் ஒரு தடவை இலங்கை விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் வால்கர் ட்ரக் கருத்து வெளியிட்டிருந்தார்.

ஐ.நாவின் அறிக்கைஅண்மையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் ஊழல் மோசடிகள் அதிகார துஷ்பயோகங்கள் தொடர்பில் அவர் கருத்து வெளியிட்டிருந்தார். இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படாது நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என அவர் குறிப்பிட்டு இருந்தார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கை உலக தமிழர் பேரவை வரவேற்பதாகவும் இலங்கை தொடர்ச்சியாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் குறிப்பாக நீதி, பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கம் போன்ற விவகாரங்களில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் குற்ற செயல்களுக்கு பொறுப்பு கூறக்கூடிய ஓர் நிலை உருவாக்கப்படாது.வடக்கு கிழக்கு பகுதியில் நெல் சில பௌத்த பிக்குகள் தமிழர்கள் மீது கடும்போக்கு வாதத்தை கட்டவிழ்த்து விட்டு உள்ளதாகவும் புதிய விகாரைகளை அமைத்து வருவதாகவும், பௌத்தர்கள் இல்லாத பகுதிகளில் விகாரைகள் அமைக்கப்பட்டு வருவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.உள்ளூர் தமிழ் மக்கள் மத வழிபாடுகளில் ஈடுபடுவதற்கும் பொருளாதார செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும், அரசாங்கம் இது குறித்து எவ்வித நடக்க வைக்கும் எடுக்கவில்லை.நில ஆக்கிரமிப்பை தடுக்க தமிழ் தலைவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும்சனல் 4 காணொளிஇந்த விவகாரம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கவனம் செலுத்த வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இலங்கை அரசாங்கங்கள் காத்திரமான தீர்வு திட்டங்களை வழங்குவதற்கு மாறாக சர்வதேச சமூகத்தின் கண்காணிப்பில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ஏற்பாடுகளில் அதிகம் முனைப்பு காட்டி வருகின்றது.ஆணைக்குழுக்களை நிறுவி அதன் மூலம் காலத்தை விரயமாக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆணைக்குழுக்கள் விசாரணைக் குழுக்களை நிறுவி, மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் இதுவரையில் எந்த ஒரு ஆணைக்குழுவினாலும் காத்திரமான தீர்வு திட்டம், பாதிக்கப்பட்ட மக்களுக்கு கிடைக்கப்பெறவில்லை.அண்மையில் சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளி தொடர்பிலும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நிறுவி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதிகளின் உதவியுடன் ஆணைக்குழு நிறுவி அதன் மூலம் காலத்தை விரயமாக்கி இந்த பிரச்சனையை திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடும் என்பதில் ஐயமில்லை.2015 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை காலமாறு நீதி பொறிமுறை குறித்த விவகாரங்களில் இலங்கையுடன் இணைந்து செயல்பட்ட போதும் இதே விதமான அணுகுமுறையே பின்பற்றியது.இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கையில் உண்மை மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறிமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை அளிக்கக்கூடிய வகையில் அமையும் என்பது சந்தேகமேயாகும்.

விசாரணை செய்ய புதிய குழு நியமனம்சர்வதேச ரீதியான விசாரணைகளை தவிர்க்கும் அல்லது அவற்றிலிருந்து விடுபடும் நோக்கிலேயே அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயம் வழங்குவதற்கு முனைப்பு காட்டப்படவில்லை.உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியான குற்ற செயல்களுக்கு பொறுப்புக்கூறக் கூடிய ஓர் பின்னணியை உருவாக்குமாறு இலங்கை மக்களிடமும் அதன் தலைவர்களிடமும் கோருகின்றோம். இலங்கையின் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு வழங்காத கலாச்சாரத்தை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.” என தமிழர் பேரவையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.