உள்நாட்டு செய்தி
இலங்கை வங்கியிடமிருந்து வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவிப்பு
இலங்கை வங்கி தமது வாடிக்கையாளர்களுக்கு விசேட அறிவித்தலொன்றை வழங்கியுள்ளது.அதன்படி வாடிக்கையாளர்களின் கார்ட் அல்லது கணக்கு அல்லது OTP விபரங்களை கேட்டு, குரியர் சேவையாக இயங்கும் இணையத்திலிருந்து போலியான குறுஞ்செய்தி வருவதாக தாம் தகவல் பெற்றுள்ளதாக இலங்கை வங்கி கூறியுள்ளது.வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்எனவே வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் எனவும், தங்கள் விபரங்களை பகிர்வதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விசேட அறிவிப்பை இலங்கை வங்கி தமது உத்தியோகபூர்வ முகப்புத்தக பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.