உள்நாட்டு செய்தி
தொடருந்து திணைக்கள ஊழியர் படுகொலை: இரத்மலானையில் சம்பவம்
இரத்மலானையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு தொடருந்து திணைக்கள ஊழியர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரத்மலானை தொடருந்து குடியிருப்பில் அமைந்துள்ள வீட்டினுள் வைத்து நேற்று (12.09.2023) கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் மாத்தறை, பியகஹா பகுதியைச் சேர்ந்த 41 வயதானவர் எனவும், அவர் தொடருந்து குடியிருப்பில் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யாழில் தனியார் விடுதியொன்றிலிருந்து சிறுமியின் சடலம் மீட்புமேலதிக விசாரணைதனிப்பட்ட தகராறு காரணமாக தொடருந்து திணைக்கள ஊழியரை ஒருவர் கத்தியால் குத்தியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இந்நிலையில் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.