முக்கிய செய்தி
HNB வங்கியின் முக்கிய அறிவித்தல்…!
போலியான குறுந்தகவல் குறித்து HNB வங்கி, தமது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல் ஒன்றை வழங்கியுள்ளது.
அந்த அறிவிப்பில் போலியான SMS, மின்னஞ்சல் அல்லது பாதுகாப்பற்ற இணையதளங்கள் மூலம் தனி நபர்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டு வருகின்றது.எனவே வாடிக்கையாளர்கள் இவ்வாறன விடயங்கள் குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும்.
அத்துடன், உங்கள் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொற்கள், அட்டை விவரங்களை பகிர்வதை தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.