முக்கிய செய்தி
விஷமருந்தி கணவன் தற்கொலை…!
கொழும்பு, மாலபே பிரதேசத்தில் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்ட நபரின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.தம்மிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டுச் சென்ற மனைவி மற்றும் இரு பிள்ளைகளுக்கு வீடு திரும்பாமையினால் மனவேதனையடைந்த கணவன, கடிதம் எழுதி வைத்துவிட்டு விஷம் அருந்தியுள்ளார்.
மாலம்பே, கொடல்லவத்தை வீதியில் வசிக்கும் ஆடை வர்த்தகரான ரமேஷ் திமன்க சல்காது என்ற 36 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவியுடன் முறுகல்உயிரிழந்தவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதன் காரணமாக இரண்டு பிள்ளைகளுடன் அவரது மனைவி வீட்டை விட்டு சென்றுள்ளதாகவும், பல தடவைகள் வீட்டிற்கு வருமாறு மனைவியை வற்புறுத்திய போதிலும் அவரிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் மனைவி கணவருக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்துள்ளார். எனினும் அதற்கு அவர் பதிலளிக்காததால், அண்டை வீட்டாருக்கு தகவல் தெரிவித்து அழைப்பை ஏற்குமாறு மனைவி கூறியுள்ளார்.
உயிரை மாய்த்த கணவன்அந்த நபர் அங்கு சென்ற போது துர்நாற்றம் வீசுவதாக மனைவியிடம் கூறியுள்ளார்.மனைவி வீட்டிற்கு வந்து பார்க்கும் போது கதிரையில் 4 நாட்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் கணவன் காணப்பட்டுள்ளார்.“தவறுகளுக்கு மன்னிக்கவும். என் மீது கோபம் கொள்ள வேண்டாம். நான் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறேன். தம்பி ஒருவரிடம் பணம் கொடுத்துள்ளேன். அதனை பெற்றுக் கொள்ளுங்கள். மன்னித்துவிடவும்.என கடிதம் ஒன்றையும் அவரது சடலத்திற்கு அருகில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.