Connect with us

உலகம்

உக்ரைனை எச்சரிக்கும் அமெரிக்கா

Published

on

உக்ரைனின் எதிர்த்தாக்குதல்களுக்கு இன்னும் 30 நாட்களே உள்ளதாக அமெரிக்காவின் உயர்மட்ட இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதன்பின்னர் ஏற்படும் குளிருடன் கூடிய வானிலையானது எதிர்த் தாக்குதலுக்கு பாரிய இடையூறாக அமையும் என ஜெரனல் மார்க் மில்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

குளிருடன் கூடிய வானிலையானது உக்ரைனின் படை நடவடிக்கையை மிகவும் கடினமாக்கும் என அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்பார்த்ததை விட மிகவும் மந்தமாகவே எதிர்த் தாக்குதல்கள் முன்னெடுக்கப்படுவதையும் ஜெரனல் மார்க் மில்லி ஏற்றுக்கொண்டுள்ளார்.

எனினும் இரண்டு தரப்பிற்கும் இடையில் கடுமையான போர் இடம்பெற்று வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.