வானிலை
எதிர்வரும் நாட்களில் நடுப்பகுதியில் பருவமழை தீவிரமடையும்!
தென்மேற்கு பருவமழை தீவிரம் காரணமாக நாடு முழுவதும் பல பகுதிகள் பாதிக்கப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஒக்டோபர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் மழையுடன் கூடிய காலநிலை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, புத்தளம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சுமார் 100 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது.களு, குடா, ஜின் மற்றும் நில்வலா ஆறுகளில் ஏற்படும் சிறு வெள்ளப்பெருக்குகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்ப்பாசன திணைக்களம், தாழ்நிலப் பிரதேசங்களில் வாழும் மக்களை கோரியுள்ளது .www.river.net.lk என்ற இணையத்தளத்தில் இருந்து ஆறுகளின் நீர்மட்டம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம். குறிப்பாக களு மற்றும் களனி ஆறுகளை அண்டியுள்ள பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.