முக்கிய செய்தி
ஆறுகளின் நீர்மட்டம் உயர்வு !
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தநிலையில், ஜின் கங்கையை அண்மித்த தவலம, பந்தேகம ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், நில்வளா கங்கையை அண்மித்த பனந்துகம தாழ்நிலப் பகுதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.