முக்கிய செய்தி
நாமல் தனியார்/பொதுச் சொந்தமான வங்கிகளை அமைக்க முன்மொழிவு
இரண்டு வங்கிகளை தனியார்/பொது பங்காளித்துவமாக அமைக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ நேற்று முன்மொழிந்துள்ளார்.
பொரளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தின் போது உரையாற்றிய நாமல் ராஜபக்ஷ, பொது மற்றும் தனியார் பங்காளித்துவ வடிவில் முதலீட்டு வங்கி மற்றும் அபிவிருத்தி வங்கி ஒன்றை அமைக்க முன்மொழிந்தார்.“பாரிய, சிறிய மற்றும் நடுத்தர வணிகர்களின் நலன்களுக்கு உதவும் இந்த இரண்டு வங்கிகளிலும் அரசு மற்றும் தனியார் துறை பங்குகளை வைத்திருக்க முடியும். மாறிவரும் உலகின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் இவை அமைக்கப்படும்,” என்றார்.“அபிவிருத்தி வங்கி நீண்ட கால மற்றும் குறுகிய கால கடன்களை வழங்க முடியும், அதே நேரத்தில் முதலீட்டு வங்கி வெளிநாடுகளில் முதலீடு செய்ய விரும்பும் இலங்கை தொழில்முனைவோருக்கு உதவ முடியும்,” என நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளார்.