Connect with us

முக்கிய செய்தி

தொடர்ச்சியாக அத்துமீறலகள்! இந்தியா சென்ற ஜனாதிபதியால் பயனில்லை

Published

on

அண்மையில் இந்தியா சென்ற இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் கடற்றொழிலாளர்களின் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை என யாழ். மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சம்மேளனத் தலைவர் புனிதப் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சமாசத்தில் நேற்றைய தினம் (26.08.2023) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில், எல்லை தாண்டிய இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் இந்திய அத்துமீறிய கடற்றொழிலில் ஈடுபடும் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் தொடர்ச்சியாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் நாமும் பல தடவைகள் இலங்கை ஜனாதிபதி மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் முறையிட்டோம்.

இந்நிலையில், அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க சென்றார். அவர் செல்வதற்கு முன்னர் அத்துமீறி உள்நுழையும் இந்திய கடற்றொழிலாளரகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறு கோரிக்கை விடுத்தோம்.ஆனால், ஜனாதிபதி இது குறித்து இந்திய பிரதமரிடம் பேசியதாக தெரியவில்லை. இவ்வாறான நிலையில் பருத்தித்துறை தொடக்கம் மன்னர் வரையான நமது கடற்பரப்புக்குள் தொடர்ச்சியாக இந்திய கடற்றொழிலாளர் அத்துமீறிய கடற்றொழிலாளர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்ஆகவே எமது கடற்றொழிலாளர்களை தொடர்ச்சியாக இந்திய அத்துமீறிய கடற்றொழிலாளர் படகுகளின் வருகையால் பாதிக்கப்பட்டு வர நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய தரப்பினர்கள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.தற்போது அமைச்சர டக்ளஸ் தேவானந்தா சீன சென்றுள்ள விடயம் தொடர்பில் ஊடகங்களில் பல்வேறு விதமாக பேசப்பட்டு வருகிறது. அமைச்சர் கடந்த மாதம் இந்தியா சென்றார் இந்த மாதம் சீனா செல்கிறார் எதிர்வரும் மாதம் அமெரிக்கா செல்லவுள்ளதாக அறிகிறோம்.அமைச்சர் ஒருவர் வெளிநாடுகளுக்கு செல்வது வழமையான விடயமாக பார்க்கப்படுகின்ற நிலையில் எமது கடற்றொழில் அமைச்சர் எமது கடற்றொழிலாளர்கள் சமூகத்தின் பொருளாதார ரீதியான அபிவிருத்திக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.ஆசியா அவிருத்தி வாங்கியும் கடற்றொழிலாளர்கள் சமூகம் வாழ்வாதாரத்துக்காக உதவி செய்ய உள்ள நிலையில் ஜப்பான் நாடும் கடற்றொழிலாளர்கள் சமூகத்தின் தொழிலுக்கு தேவையான உபகரணங்களை வழங்க உள்ளதாக அறிகிறோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.