Connect with us

முக்கிய செய்தி

அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் வைத்தியசாலையில்

Published

on

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் அதிக வேகத்துடன் பயணித்த மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.ஹட்டன் மல்லியப்பு ஸ்டிதரன்  பகுதியில் இன்று (27.08.2023) மாலை 4 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த விபத்தில் இளைஞர் ஒருவரும், யுவதியும் காயமடைந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.பொலிஸார் விசாரணைஹட்டனில் இருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் காயமடைந்த இருவரும் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *