முக்கிய செய்தி
நுவரெலியாவில் வாகன விபத்து: இருவர் படுகாயம்
ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி பயணித்த வான் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் விழுந்ததில் வானின் சாரதியும் உரிமையாளரும் படுகாயமடைந்துள்ளனர்.மேலதிக விசாரணைசம்பவத்தில் காயமடைந்தவர்கள் லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.