Connect with us

வானிலை

அம்பாரை, மட்டக்களப்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில்இன்று மழை எதிர்பார்ப்பு.!

Published

on

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாரை, மட்டக்களப்பு மற்றும் பொலநறுவை மாவட்டங்களின் சில இடங்களிலும்,மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.மேல் மாகாணத்திலும் அத்துடன் இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும்.பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அத்துடன் வவுனியா, முல்லைத்தீவு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அதிகரித்த வெப்பநிலை காணப்படும்

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *