முக்கிய செய்தி
திருகோணமலை ஜமாலியா பிரதேசத்தில் பதட்டம்…!
திருகோணமலை, ஜமாலியாபுரம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மர்மமாக உயிரிழந்துள்ளார்.
இதனையடுத்து ஜமாலியா பிரதேசவாசிகள் நிலாவௌி – திருகோணமலை பிரதான வீதியில் வீதியில் இறங்கி,
பொலிசாருக்கு எதிராக டயர்களை எரித்து பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.
இதன் காரணமாக அப் பிரதேசத்தில் தற்போது பதட்ட நிலமை ஏற்பட்டுள்ளதுடன்
குறித்த பாதையில் போக்குவரத்தும் சற்று தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிலமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக பொலிசாரும், இராணுவத்தினரும் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் சற்று முன்னர் திருகோணமலை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் கருத்து தெரிவிக்கையில்,
கூடிய விரைவில் இயல்பு நிலையை ஏற்படுத்த தன்னால் முடியுமான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளார்.