உள்நாட்டு செய்தி
மட்டக்களப்பில் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை..!
காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் ஆசிரியை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (21) இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பிரதான வீதி புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரான மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையின், ஆசிரியையாக கடமை புரிந்தவரே இவ்வாறு தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவராவார். அண்மையில் குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் இருந்து வீடு திரும்பிய நிலையில், குடும்பப் பெண்ணுக்கும் தாய் தந்தையருக்கிடையில் ஏற்பட்ட தகராறே காரணம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணகைளில் போது தெரியவந்துள்ளது.