முக்கிய செய்தி
மற்றுமொரு பல்கலைக்கழக மாணவி தற்கொலை..!
மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கிளிநொச்சி, விவேகானந்தநகர் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய சந்திரமோகன் தேனுஜன் என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார்.கல்விப் பொதுச் சான்றிதழ் பரீட்சையில் 2020ஆம் ஆண்டு கணிதப் பிரிவில் கிளிநொச்சி மாவட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.மனவேதனையின் காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பிரதேச மக்கள் சந்தேகிக்கின்றனர்.உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனின் பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.