முக்கிய செய்தி
திருகோணமலை பெட்ரிக் கோட்டை பொதுமக்களுக்காக திறந்து வைப்பு
பாதுகாக்கப்பட்ட திருகோணமலை பெட்ரிக் கோட்டையை (Fort Frederick) பார்வையிடுவதற்கு உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு நேற்று (19) முதல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இதன்படி சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டதுடன் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தலைமையில் சுற்றுலா பயணச்சீட்டு அறிமுகம் செய்யப்பட்டது.மத்திய கலாசார நிதியத்தின் திருகோணமலை திட்டத்தின் ஊடாக திருகோணமலை பிரடெரிக் கோட்டையின் பாரம்பரிய முகாமைத்துவ செயற்பாடுகள் கடந்த சில வருடங்களாக பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.