உள்நாட்டு செய்தி
மட்டக்களப்பில் மோசடியில் ஈடுபட்ட போலி வெளிநாட்டு முகவர் கைது..!
மட்டக்களப்பில் சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவராக செயற்பட்டு வந்த நபரொருவரை,
வெள்ளிக்கிழமை (18) கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர் கடந்த வருடம் நவம்பர் மாதம் சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு அனுப்புவதாக கொக்கட்டிச்சோலை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரிடம்,
ஒரு இலட்சம் ரூபாவும் இன்னொருவரிடம் 60 ஆயிரம் ரூபா உட்பட ஒரு இலட்சத்து 60 ஆயிரம் ரூபாவை வாங்கி கொண்டு,
கடந்த 7 மாதங்களாக வெளிநாட்டுக்கு அனுப்புவதாக ஏமாற்றி வந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர்.
இதனையடுத்து, குறித்த போலி முகவரை பொலிஸ் நிலையத்துக்கு வரவழைத்து பொலிஸார் விசாரணையின் பின்னர் மோசடியில் ஈடுபட்ட அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவரை இன்று சனிக்கிழமை மட்டு நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.