உள்நாட்டு செய்தி
சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியானதங்க திரவத்துடன் சிக்கிய இளைஞன்…!
சுமார் 2 கோடியே 50 லட்சம் ரூபா பெறுமதியான தங்க திரவத்துடன், இந்தியா செல்ல முயன்ற ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.கொழும்பு வாழைத்தோட்டப் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டதாக இலங்கைச் சுங்கத்தின் பேச்சாளர் சுதத்த சில்வா தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் மும்பை செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த சந்தேகநபர், சந்தேகத்தின் பேரில், எக்ஸ்ரே பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.இதன்போது, ஒரு கிலோ 280 கிராம் எடையுள்ள இந்த தங்க திரவத்தை அவரது உடலில் மறைத்து வைத்திருந்த நிலையில், சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Continue Reading