முக்கிய செய்தி
நாட்டில் மீண்டும் இனக்கலவரம் ஏற்படும் சூழ்நிலை: எச்சரிக்கின்றார் எதிரணி எம்.பி –

நாட்டில் மீண்டும் ஒர் இனக் கலவரம் ஏற்படுமா என்று ஐயம் எழுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.இலங்கையில் மீண்டும் ஓர் இனக் கலவரம் ஏற்படுவதற்குரிய சூழ்நிலை காணப்படுவதாக இலங்கையை கண்காணிக்கும் இந்திய உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிப்பதாக தமிழகத்தின் பத்திரிக்கையான தினமலர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.இவ் விடயத்தை மேற்கோள் காட்டி நம் நாட்டு பத்திரிகைகளிலும் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் 13 ஆவது திருத்த சட்டம் நீக்கப்படும் என்ற கருத்துக்களும் நம் மத்தியில் உலாவுகின்றது.அது அவ்வாறு நடந்தேறினால் நாடு பற்றி எரிவது உறுதி நாடு பிளவுபடுவதை தடுப்பதற்காகவே 13 ஆவது சேர்த்திருத்தம் உருவாக்கப்பட்டது .13 நடைமுறைப்படுத்துவது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் அனைத்துப் பேரணிகளுக்கும் பெருந்தொட்ட மலையக மக்கள் சார்பில் நான் என்னுடைய ஆதரவை முழுமையாக அளிப்பேன் மேலும் குருந்தூர் மலையில் நடைபெற்ற பொங்கல் நிகழ்வை தடுக்க பௌத்தர்களை அணிதிரளுமாறு ஒரு அமைச்சர் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.