உள்நாட்டு செய்தி
வறட்சி காரணமாக உள்நாட்டு பால் உற்பத்தி பாதிப்பு !
நிலவும் வறட்சியான காலநிலையினால் உள்நாட்டு பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.இந்தநிலையில், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கால்நடை பிரிவுக்கு விவசாய அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
வறட்சியான காலநிலையை கருத்திற் கொண்டு கால்நடை வளர்ப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை குறைத்துக் கொள்ள முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.