உள்நாட்டு செய்தி
கிளிநொச்சியில் பாம்பு தீண்டி குழந்தை பலி !
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் பாம்பு தீண்டி குழந்தையொன்று உயிரிழந்துள்ளது.நேற்றிரவு குழந்தை நித்திரையிலிருந்த சந்தரப்பத்தில் வீட்டிற்குள் புகுந்த பாம்பு குழந்தையை தீண்டியுள்ளது. இதன்போது குழந்தையை தர்மபுரம் வைத்தியசாலையில் பெற்றோர் உடனடியாக அனுமதித்துள்ளனர்.எனினும் குழுந்தையின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவித்த வைத்தியர்கள் குழந்தையை கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
ஆனபோதும் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு வயது ஏழு மாத தனுஜன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் தர்மபுரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.