உள்நாட்டு செய்தி
பெண்களை நிர்வாணமாக்கி, பிக்குவை தாக்கியவர்கள் கடுமையான நிபந்தனைகளுடன் விடுதலை
நவகமுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு மற்றும் பெண்கள் இருவரை தாக்கிய சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்ட 9 பேரும் கடுமையான பிணை நிபந்தனைகளுடன் இன்று புதன்கிழமை (26) விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சாட்சிகள் மீது செல்வாக்கு செலுத்தக்கூடாது போன்ற கடுமையான பிணை நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் கைதான கடுவலை பிரதேசத்தில் வசிக்கும் 9 பேரே இவ்வாறு சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் .
மேலும் இது தொடர்பிலான வழக்கு நவம்பர் 29ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கடுவலை நீதவான் உத்தரவிட்டுள்ளார் .
நவகமுவ பிரதேசத்திலுள்ள விகாரையொன்றில் பிக்கு ஒருவர் பிண்களுடன் அரைகுறை ஆடையுடன் சிக்கிய காணோளி சமூக ஊஅடகங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.