உள்நாட்டு செய்தி
ஜனாதிபதியை சந்திக்கும் வடக்கு,கிழக்கு பிரதிநிதிகள்
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இடையிலான கலந்துரையாடல் இன்று(18) இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று(18) மாலை 3 மணிக்கு இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் இன்றைய கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளதாக கட்சியின் ஊடகப்பேச்சாளர், பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி M.A.சுமந்திரன் கூறினார்.
எவ்வாறாயினும் இன்றைய கூட்டத்தை புறக்கணிக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்துள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளர், பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை உறுதிப்படுத்தினார்.