முக்கிய செய்தி
அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் கால அவகாசம் நிறைவு
அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் தொடர்பில் நாட்டு மக்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி இதற்கான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் (10.07.2023) நிறைவடையவுள்ளது.
முன்னதாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்தது.
எனினும், பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை இன்று வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
அஸ்வெசும சமூக நலன் திட்டத்திற்காக சுமார் 9 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதுவரை சுமார் 12,000 ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும் இன்றும் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை முன்வைக்க முடியும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்பிறகு, மாவட்டச் செயலாளர்கள் மூலம் பெறப்படும் முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு இறுதி ஆவணம் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது