உள்நாட்டு செய்தி
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
காலி, கராபிட்டிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.நடமாடும் பொலிஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது வௌிநாட்டில் தயாரித்த கைக்குண்டு ஒன்றை வீசி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, 105 T-56 ரக தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.