உள்நாட்டு செய்தி
அதிபர்களுக்கான விசேட அறிவிப்பு
நடைபெறவிருக்கும் க.பொ.த சாதாரண தர 2022(2023) பரீட்சை தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அதிபர்களுக்கு விசேட அறிவிப்பு ஒன்றை வௌியிட்டுள்ளார்.எக்காரணம் கொண்டும் அதிபர்கள் உரிய பரீட்சைக்கான நுழைவுச் சீட்டுகளை பரீட்சார்த்திகளுக்கு வழங்காமல் தடுத்து வைக்கக் கூடாது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.நுழைவுச் சீட்டுகள் கிடைக்காத காரணத்தினால் பரீட்சைக்குத் தோற்ற முடியாமல் போனால் அதற்கு அதிபரே முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி அமித் ஜயசுந்தர தெரிவித்தார்.